வம்சி இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வாரிசு. இந்த படத்தின் போஸ்டரும், பர்ஸ்ட் சிங்கில் பாடலும், ஏற்கனவே வெளியாகி, ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா, வரும் டிசம்பர் 24-ஆம் தேதி அன்று நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த முறை, நேரு ஸ்டேடியத்தில் தான் இசை வெளியீட்டு விழா நடக்க இருக்கிறதாம். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளதாம்.