விஜய் நடிப்பில், வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், கடந்த 11-ஆம் தேதி அன்று வெளியான திரைப்படம் வாரிசு. பெரும்பாலும் நெகட்டிவ் விமர்சனங்களையே சந்தித்த இந்த திரைப்படம், தோல்வி அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், குடும்ப ஆடியன்சை டார்கெட் செய்து எடுக்கப்பட்டிருந்ததால், இந்த திரைப்படம் உலகம் முழுவதும் நல்ல வசூலை குவித்து வருகிறது. மேலும், படம் வெளியான 11 நாட்களிலேயே, 250 கோடி ரூபாய் வரை வசூலித்து சாதனை படைத்தது.
இந்நிலையில், இந்த திரைப்படம் சைலண்டாக புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதன்படி, 14 நாட்கள் முடிவில் 268 கோடி ரூபாய் வசூலித்த வாரிசு திரைப்படம், மெர்சல் படத்தின் வாழ்நாள் வசூலை முறியடித்துள்ளது.
இப்படத்தின் வசூல் வேட்டை இப்படியே தொடர்ந்தால், பிகில் படம் படைத்திருந்த 305 கோடி ரூபாய் வசூல் சாதனையையும் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.