தளபதி விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வனிதா விஜயகுமார்.
இந்த படத்திற்கு பிறகு, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில், கதாநாயகியாக நடித்து வந்தார்.
அதன்பிறகு, சினிமாவில் இருந்து விலகிய இவர், தற்போது சின்னத்திரையில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தனது மகளுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார். மேலும், விரைவில் தனது மகளை கதாநாயகியாக அறிமுகப்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
படிக்கும் வயதில், மகளை சினிமாவில் நுழைக்க பார்க்காதீர்கள் என்று, நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.