தமிழ் சினிமாவின் காமெடி ஜாம்பவான்களில் ஒருவர் வைகைப் புயல் வடிவேலு. சில அரசியல் காரணங்களால், சினிமாவில் இருந்து விலகியிருந்த இவர், தற்போது மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார்.
சந்திரமுகி 2, மாமன்னன், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், விஜய்சேதுபதியுடன் ஒரு திரைப்படம் என்று பல்வேறு படங்களில் கமிட்டாகி வருகிறார். இதில், விஜய்சேதுபதியுடன் நடிக்க உள்ள திரைப்படத்திற்கு, ரூபாய் 5 கோடியை சம்பளமாக வடிவேலு கேட்டுள்ளாராம்.
இதனை கேட்டு, தயாரிப்பாளர் தரப்பு, மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளதாம். இதனை அறிந்த நெட்டிசன்கள், நேரம் பார்த்து, வடிவேலு செக் வைத்துவிட்டார் என்று கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.