தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு 2, இடியட் ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் ராம் பாலா. லொள்ளு சபா என்ற பிரபல காமெடி நிகழ்ச்சியையும் இயக்கியுள்ள இவர், தற்போது வடிவேலுவுடன் கூட்டணி வைக்க உள்ளார்.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்க உள்ள இந்த திரைப்படத்தில், வடிவேலு வில்லனாக நடிக்க இருக்கிறாராம். காமெடியன், ஹீரோ, குணசித்திர நடிகர் என்று பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்த வடிவேலு, ஒருமுறை கூட, வில்லனாக நடித்ததில்லை. ஆனால், தற்போது அவர் இவ்வாறு நடிக்க இருப்பது, ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.