உத்தரபிரதேச மாநிலம் ஷாஹாபாத் பகுதியில் உள்ள ராம்பூரை சேர்ந்த இளைஞர், தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார்.
சூதாட்டத்தில் அதிக ஆர்வம் கொண்ட அந்த இளைஞர், தன்னிடம் உள்ள பொருட்களை வைத்து, நண்பர்களுடன் சூதாடியுள்ளார். அப்போது, ஒட்டுமொத்த பணத்தையும் இழந்த இளைஞர், தனது மனைவியை பணயமாக வைத்து, சூதாடியதாக கூறப்படுகிறது.
ஆனால், மீண்டும் சூதாட்டத்தில் தோல்வி அடைந்ததால், தனது நண்பர்களுடன் உறவு கொள்ள, மனைவியை நிர்பந்தித்துள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண், காவல்துறையில் புகார் அளித்தார். புகாரை ஏற்றுக் கொண்ட காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.