சீக்கிரம் வந்துடுங்க.., – ட்ரம்பின் பதவியேற்பு விழா.. அவசரப்படுத்தும் கல்வி நிறுவனங்கள்..

சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில், கமலா ஹாரிஸ்-ம், டெனால்ட் டிரம்பும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில், 300-க்கும் மேற்பட்ட எலக்டோரல் வாக்குகளை பெற்ற டிரம்ப், அபார வெற்றி பெற்றார். இதையடுத்து, இவரது பதவியேற்பு விழா, வரும் ஜனவரி 20-ஆம் தேதி அன்று நடக்க உள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள கல்வி நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து தங்களது நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு, சில அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, டிரம்ப் பதவியேற்றதற்கு பிறகு, பயணத் தடை விதிப்பதற்கான அபாயம் இருப்பதால், பதவியேற்பு விழாவிற்கு முன்பு, மாணவர்கள் அமெரிக்காவிற்கு திரும்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அதாவது, மாசசூசெட்ஸ், ஆம்ஹெர்ஸ்ட் ஆகிய பல்கலைக்கழகங்கள், தங்களது சர்வதேச மாணவர்களுக்கும், பணியாளர்களுக்கும், சில அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. அதில், 2017-ஆம் ஆண்டின்போது, டிரம்ப் பதவியேற்ற பிறகு, குறிப்பிட்ட சில நாட்டின் மக்களுக்கு, பயணத் தடை விதிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், தற்போதும் தடை விதிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, பதவியேற்பு விழாவுக்கு முன்கூட்டியே, அமெரிக்காவுக்கு வந்துவிடுங்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதனால், அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்களும், பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News