உத்தரபிரதேச மாநிலம் ஜலான் மாவட்டத்தை சேர்ந்தவர் ரோஷினி அஹிர்வர். 21 வயதான இவர், கல்லூரியில் 3-ஆம் ஆண்டு பயின்று வருகிறார். இந்நிலையில், இவர் கல்லூரியில் தேர்வு எழுதிவிட்டு, வீட்டிற்கு திரும்பி வந்துக் கொண்டிருந்தார்.
அப்போது, அந்த பெண்ணை வழிமறித்த இரண்டு பேர், துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
இதற்கிடையே, அந்த பெண்ணை சுட்டு கொலை செய்யும் வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலாக பரவி வந்தது. இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர், கொலையாளிகளை கைது செய்துள்ளனர். எதற்காக அந்த பெண்ணை கொலை செய்தார்கள்? என்பது தொடர்பாக அவர்களிடம் விசாரணையும் நடந்து வருகிறது.