மகிழ் திருமேணி இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், நேற்று வெளியாகி உள்ள திரைப்படம் கலகத் தலைவன். விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த திரைப்படம், நல்ல வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், இந்த திரைப்படம் வெளியான சில மணி நேரங்களிலேயே, இணையத்தில் சட்டவிரோதமாக வெளியிடப்பட்டுள்ளது. இதன்காரணமாக, படத்தின் வசூலில் பாதிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தகவல், உதயநிதி உட்பட படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.