என் கைதுக்கு உதயநிதிதான் காரணம் – சவுக்கு சங்கர் பரபரப்பு தகவல்

காவல்துறையில் பணியாற்றும் பெண் அதிகாரிகளுக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக யூ டியூபர் சவுக்கு சங்கர் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் கோவையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது வயிற்று வலி எனக்கூறி சவுக்கு சங்கர் மயக்கமடைந்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து இன்று மதியம் 12.30 மணியளவில் சவுக்கு சங்கர் சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சை முடிந்ததும் மீண்டும் காவல்துறை வேனில் ஏறுவதற்காக சவுக்கு சங்கர் வந்தார். அப்போது வேனில் இருந்தபடியே “என் கைதுக்கு உதயநிதிதான் காரணம், உதயநிதி உத்தரவின் பேரில், என் மீது மீண்டும் மீண்டும் பொய் வழக்கு போட்டு கைது செய்து வருகின்றனர்” என தெரிவித்தார்.

RELATED ARTICLES

Recent News