ரயிலில் 12.5 கிலோ கஞ்சா கடத்தி வந்த இருவர் கைது!

ஹவுரா- சென்னை விரைவு ரயிலில் கஞ்சா கடத்தி வந்த இரண்டு பேரை இரயில்வே போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

நாளுக்கு நாள் கஞ்சாவின் புழக்கம் அதிகரித்து கொண்டு செல்வதால் மாநில எல்லைகளில் அதிகளவிலான பாதுகாப்பு நடவடிக்கையை பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ரயில்கள் மூலம் கஞ்சாக்கள் கடத்தப்பட்டு வருவது வாடிக்கையாகிவிட்டது.

வட மாநிலங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் ரயில்களின் எண்ணிக்கையில் சிறுக சிறுக கஞ்சா கடத்தி வருவதால் இதனை தடுக்கும் பொருட்டு NARCOS ஆபரேஷன் என்கிற பெயரில் கஞ்சா ஊடுருவலை தடுக்க ரயில்வே போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கஞ்சா கடத்தி வருகின்ற கும்பல்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது ஹவுரா சென்னை விரைவு ரயிலில் நேற்று மாலை நான்காவது நடைமேடையில் இறங்கிய நபர்களை ரோந்து போலீசார் சோதனை மேற்கொண்ட போது திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த முத்துராஜ் (45) மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுடலை மணிகண்டன்(25) என்கிற இரண்டு நபர்களின் ஷோல்டர் பையை சோதனை மேற்கொண்ட போது 12.5 கிலோ எடை கொண்ட கஞ்சாக்களை டேப் மூலம் சுத்தி மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

அவற்றை பறிமுதல் செய்து இரண்டு பேரையும் கைது செய்த ரயில்வே போலீசார் 6.25 லட்சம் மதிப்புள்ள கஞ்சாக்களை விற்பனை செய்வதற்கு தென்தமிழகத்தில் இருந்து ரயில் மூலமாக ஒடிசா மாநிலத்துக்கு சென்று வாங்கி வந்து விற்பனை மேற்கொள்வது கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளனர்.

அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

RELATED ARTICLES

Recent News