ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பாராஞ்சி மயான பகுதியில் கஞ்சா விற்பதாக சோளிங்கர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவல் பேரில் சோளிங்கர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது பாராஞ்சி மயான பகுதியில் முள்புதரில் இருந்து இருவர் போலீசாரை பார்த்ததும் ஓடி உள்ளனர்.
போலீசார் மடக்கி பிடித்து விசாரித்த போது அப்பகுதியை சேர்ந்த பிரசாந்த் (28), ஜோதிபுரம் ராஜேஷ் (26) என்பதும் இவர்கள் கஞ்சா விற்பனை செய்து வந்தததும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர். வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.