ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கியதில் இருந்து, பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை, எலன் மஸ்க் எடுத்து வருகிறார்.
ட்விட்டர் நிறுவனத்தின் லோகோவை மாற்றியது, ப்ளு டிக் பெறுவதற்கு கட்டணம், ட்விட்டர் நிறுவனத்தின் பெயரை மாற்றியது என்று தொடர் அதிர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், புதிய அதிரடி அறிவிப்பு ஒன்றை எலன் மஸ்க் வெளியிட்டுள்ளார். அதாவது, Not a Bot என்ற புதிய திட்டம், சோதனை முறையில், அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின்படி, இனிமேல், ட்விட்டரை பயன்படுத்தும் சந்தாதாரர்கள், ட்வீட் செய்வதற்கும், லைக் போடுவதற்கும், ரீ ட்வீட் செய்வதற்கும், கமெண்ட் போடுவதற்கும், ஆண்டுக்கு ஒரு அமெரிக்க டாலர் கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது.
போலி கணக்கர்களை அடையாளம் காணவும், செயற்கையான கணக்குகளை கண்டறியவம் தான் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும், லாப நோக்கத்திற்காக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படவில்லை என்றும், கூறப்பட்டுள்ளது.
இந்த திட்டம், பரிசோதனை முயற்சியாக, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ் நாடுகளில் மட்டும் தொடங்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
தற்போது, ட்விட்டர் பிரீமியம் சேவைக்கு, ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் பயனர்கள் ஆண்டுக்கு 900 ரூபாயும், இணைய பயனர்கள் ஆண்டுக்கு 650 ரூபாயும், இந்தியாவில் செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.