ட்விட்டர் அலுவலகம் க்லோஸ்..! ட்ரெண்டாகும் ”#RIP” twitter..!

முன்னணி சோசியல் மீடியாக்களில் ஒன்றான டிவிட்டர் சுமார் 396.5 மில்லியன் பயனாளர்களை கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தை சமீபத்தில் விலை கொடுத்து வாங்கிய எலன் மஸ்க், தொடர்ந்து ப்ரேக்கிங் செய்திகளாகவே கொடுத்து வருகிறார். அதாவது பணி நேரத்தை தவிர்த்து கூடுதலாக வேலைப்பார்க்க வேண்டும் கட்டளையிடும் இவர், விருப்பமில்லாதவர்கள் ராஜினாமா செய்யலாம் என்று இ-மெயில் மூலம் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதையடுத்து சுமார் 3-ஆயிரம் ஊழியர்கள் ராஜினாமா செய்துள்ளதாக தெரிகிறது. மேலும் வருகின்ற 21-ஆம் தேதி டிவிட்டர் நிறுவனத்தின் அலுவலகங்கள் மூடப்படும் என இமெயில் அனுப்பப்படுவதாகவும் கூறப்பட்டது. இது தொடர்பாக டிவிட்டர் பக்கத்தில் ஒருவர் கேட்ட கேள்விக்கு, சிறந்த மனிதர்கள் டிவிட்டரில் தொடர்வதால், வெளியேறுபவர்கள் குறித்து கவலைப்பட தேவையில்லை என எலான் மஸ்க் பதிலளித்துள்ளார்.

இந்த நிலையில் ஊழியர்களின் ராஜினாமா அதிகமாவதைத் தொடர்ந்து டிவிட்டரில் ”#RIP” ட்விட்டர் ட்ரெண்டாகி வருகிறது.

RELATED ARTICLES

Recent News