தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு கடந்த 27-ந் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற்றது. அப்போது அங்கு தவெகவின் கொள்கையை விஜய் அறிவித்தார்.
தற்பொழுத்து தவெகவின் கொள்கைகள் அரசியல் அரங்கில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில் அக்கட்சியின் அடுத்தக்கட்ட நகர்வாக பனையூரில் உள்ள தலைமை கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் இன்று (நவ.3) காலை ஆலோசனை கூட்டம் என்.ஆனந்த தலைமையில் நடைபெற்றது.
இதை தொடர்ந்து விஜய் தலைமையில் தவெக செயற்குழு மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் பனையூரில் நடைபெறுகிறது.