தமிழகம் முழுவதிலும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் தொண்டர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி, தீவிர அரசியலில் ஈடுபட்டு, 2026 சட்டப்பேரவை தேர்தல்தான் இலக்கு என்றும் விஜய் அறிவித்தார்.
இதனை தொடர்ந்து தனது கட்சிக்கான கொடியை கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிமுகம் செய்த அவர், தனது கட்சிக்கான தேர்தல் ஆணைய அனுமதிக்காக காத்திருந்தார்.
இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிக்கான அங்கீகாரத்தை தமிழக வெற்றிக் கழகத்திற்கு வழங்கியுள்ளது.
மேலும், தமிழகம் முழுவதிலும் உள்ள அக்கட்சியின் தொண்டர்கள், பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.