Youtube சேனலில் வீடியோ பதிவிட்டு, பிரபலம் அடைந்தவர் TTF வாசன். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி, கோர்ட்டு, ஜெயில் என்று சுற்றி வந்த இவர், சமீபத்தில் விபத்து ஒன்றிலும் சிக்கியிருந்தார்.
இந்நிலையில், இவர் கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு சென்று, மரியாதை செலுத்தியுள்ளார். அதன்பிறகு, அங்கிருந்து அவர் கிளம்பியபோது, சில 2K கிட்ஸ் பாய்ஸ், வாசனிடம் செல்பி எடுக்க முயன்றுள்ளனர்.
அதற்கு மறுப்பு தெரிவிக்காத வாசன், அவர்களுடன் போஸ் கொடுத்துள்ளார். இதனைக் கண்டு கோபம் அடைந்த தேமுதிக தொண்டர்கள், அவரை அங்கிருந்து வெளியேற்றினர்.