விஜயின் லியோ திரைப்படத்தின் வெற்றி விழா, சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நடிகை த்ரிஷா, பல்வேறு சுவாரசியமான தகவல்களை மேடையில் கூறினார்.
இதற்கிடையே, “நானும், அர்ஜுன் சாரும் ரொம்ப லக்கி.. நாங்க ரெண்டு பேரும் மீண்டும் ஒரு படத்தில் இணைய போறோம்” என்று கூறியிருந்தார்.
இதனை கவனித்த ரசிகர்கள், அந்த திரைப்படம், விடாமுயற்சி தான் என்று கூறி வருகின்றனர்.
முன்னதாக, த்ரிஷாவும், அர்ஜுனும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருவதாக, தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.