இந்த ஆண்டு அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகை வர உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளுக்காக டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான சிறப்பு டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது.
டிக்கெட் முன்பதிவு தொடங்கிய அடுத்த ஐந்து நிமிடத்திலேயே முழுமையாக விற்று தீர்ந்தது. இணையதளம் வாயிலாக டிக்கெட் புக்கிங் செய்ய காத்திருந்தவர் பெரும்பாலும் காத்திருப்பு பட்டியலுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக கன்னியாகுமரி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரயில்களில் ஐந்து நிமிடத்தில் டிக்கெட்டுகள் அனைத்தும் காலியானது.