காளையர் கோயில் அருகே பாட்டு கேட்டபோது புளுடூத் வெடித்ததில் முதியவர் காதில் பலத்த காயம் ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள மாத்துக்கமாயை கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (55).
இவர் வீட்டில் படுத்து இருக்கும் பொழுது ப்ளூடூத் மூலம் பாட்டு கேட்டுயுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென்று காதில் மாட்டி இருந்த ப்ளூடூத் ஹெட்போன் வெடித்துச் சிதறியது, இதனால் பன்னீர்செல்வம் காது பகுதியில் பலந்த காயம் ஏற்பட்டது.
பின்னர் சிகிச்சைக்காக 108 வாகனம் மூலம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து காளையார்கோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தூங்கும் பொழுது
ப்ளூடூத் மூலம் பாட்டு கேட்டதால் காது சிதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.