சென்னையில் கஞ்சா போதையில் போக்குவரத்து பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் சாலையில் பணியில் இருந்த பெண் காவலர் நோ என்ட்ரி சாலையில் வந்து கொண்டிருந்த நபர்களை நிறுத்தி ஆவணங்களைக் கேட்டுள்ளார்.
அப்போது, கஞ்சா போதையில் இருந்த இரண்டு இளைஞர்கள் பெண் காவலரை கொன்றுவிடுவேன் என மிரட்டி செல்போனில் படம் பிடித்துள்ளனர்.
இதனை அடுத்து பெண் காவலர் சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் செல்வகுமார், ஜாட்வின் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.