பருவநிலை மாற்றம் காரணமாக தக்காளி சாகுபடி பாதிப்பு. விவசாயிகள் வேதனை

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 150 ஏக்கருக்கும் மேல் தக்காளி பயிரிட்டுள்ளனர்.

தற்போது தக்காளி கிலோ ரூ.80 முதல் ரூ.90 வரை விற்கப்படும் நிலையில், நல்ல வளர்ந்து வந்த தக்காளி செடிகள் திடீரென வாடி சுருங்கி காணப்படுகிறது. போதிய விளைச்சல் இல்லாமல் இருப்பதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு கோடையில் பயிரிட்ட தக்காளி செடிகளை நன்கு தண்ணீர் பாய்ச்சி, நல்ல முறையி்ல் பராமரித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு திடீரென பரவலாக நல்ல மழை பெய்தது. அதிகப்படியான வெயிலில் இருந்து திடீரென பருவநிலை மாறியதால் தக்காளி செடிகளால் அவற்றை தாக்கு பிடிக்க முடியாமல் வாடி வருகிறது.

இதனால் விளைச்சல் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே விளைவதாகவும், செடிகளில் உள்ள தக்காளி சுருங்கி காணப்படுவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

சுருங்கிய தக்காளிகளை மிகக்குறைந்த விலைக்கே பெற்றுச்செல்கின்றனர். இதனால் தற்போது தக்காளி நல்ல விலை போகும் தருனத்தில் பாதிப்பு ஏற்பட்டு பெரும் நஷ்டம் ஏற்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர். 

RELATED ARTICLES

Recent News