நடப்பாண்டில் ஏப்ரல் மாதம் மாற்றப்பட வேண்டிய சுங்கக்கட்டணம் மக்களவை தேர்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. தேர்தல் முடிந்த நிலையில் ஜூன் மாதத்தில் சுங்கக்கட்டணத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உயர்த்தியது. இந்த சூழலில் செப்டம்பர் மாதத்திற்கான சுங்கக்கட்டணம் மாற்றம் செய்யப்பட உள்ளது.
Also Read : அண்ணா அறிவாலயம் வளாகத்தில் பீர் பாட்டிலை வீசிய அதிமுக முன்னாள் நிர்வாகி!
அதன்படி தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வரை சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. இந்த உயர்வால் வாகன ஓட்டிகள் ரூ.5 முதல் ரூ.150 வரை அதிகமாக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, மதுரை, ஓமலூர், சமயபுரம் உட்ப 25 சுங்கச்சாவடிகளி செப்டம்பர் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர உள்ளது.