தமிழகத்தில் நிலவிய வரலாறு காணாத கோடை வெயில் மற்றும் மழை காரணமாக விவசாய உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் மார்க்கெட்டுகளில் காய்கறி வரத்து குறைந்து காணப்பட்டதால் காய்கறிகளின் விலை உயந்தது.
இந்நிலையில் திண்டுக்கல், காந்தி காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகளின் வரத்து தற்போது அதிகரித்துள்ள நிலையில் காய்கறிகளின் விலை குறைந்து வருகிறது.
நாட்டுத்தக்காளி வரத்து அதிகரித்து உள்ளதால் கிலோ 80 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி இன்று கிலோ 30 ரூபாயிலிருந்து 50 ரூபாய் வரை விற்பனையாகின்றது.