ஆதார் தொடர்பான மோசடிகளைத் தடுக்க, 10 வருடங்களாக ஆதார் வைத்திருப்பவர்களை, சமீபத்திய தகவலுடன் விவரங்களைப் புதுப்பிக்குமாறு UIDAI வலியுறுத்தி உள்ளது
10 ஆண்டுகளாக ஆதார் கார்டை அப்டேட் செய்யாதவர்கள், விலாசம் மாறியவர்கள், ஆதார் கார்டில் தவறான விவரங்கள் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும்.
இதையடுத்து, ஆதாரை இலவசமாக புதுப்பிக்க வருகிற 14ம் தேதி வரைதான் கால அவகாசம் உள்ளது என்ற தகவல் பரவியது. இதனால் இ- சேவை மையம் மற்றும் ஆதார் மையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதின. கடந்த 10 நாட்களில் மட்டும் சுமார் 50 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் தங்கள் ஆதார் அட்டையினை புதுப்பித்துக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிப்பதற்கான கால அவகாசம் டிச.14 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. டிச. 14-க்குள் ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பித்துக்கொள்ளலாம் என்று ஆதார் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.