கீழ்பவானி பாசன கால்வாயில் கான்கிரீட் சுவர் அமைக்கும் திட்டத்தை கைவிடக் கோரி, கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் கீழ்பவானி பாசன கால்வாயில், கான்கிரீட் சுவர் அமைக்கும் திட்டத்தை, தமிழ்நாடு அரசு சமீபத்தில் தொடங்கியது.
இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி விவசாய சங்கத்தினர் சார்பில், போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், வனிகர் சங்கத்தினர் கடையடைப்பு செய்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய வனிகர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பரமசிவம், தமிழக அரசின் இந்த திட்டம் தொடர்ந்து நடைபெற்றால், ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய 3 மாவட்டங்கள் பாலைவனம் ஆகும் சூழல் ஏற்படும் என்று எச்சரித்தார். எனவே, இந்த திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.