ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதியில் உள்ள டக்கிலி மண்டல் பகுதியை சேர்ந்தவர் கல்யாண். டிக்-டாக்கில் வீடியோக்களை பதிவிட்டு வந்த இவரும், நித்யஸ்ரீ என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். ஆனால், சில நாட்கள் கடந்த பிறகு, இருவருக்கும் செட் ஆகவில்லை.
இதனால், நித்யஸ்ரீ-யை விட்டு பிரிந்த கல்யாண், விமலா என்ற பெண்ணை திருமணம் செய்துக் கொண்டுள்ளார். இவர்கள் இருவரும் ஒன்றாக மகிழ்ச்சியுடன் வாழ்ந்த வந்த நிலையில், சில வருடங்கள் கழித்து கல்யாண் வாழ்க்கைக்குள் நித்யஸ்ரீ மீண்டும் வந்துள்ளார்.
அதாவது, கல்யாண் இருக்கும் இடம் தேடி வந்த நித்யஸ்ரீ, விமலாவிடம் தனது காதல் கதை பற்றி கூறியுள்ளார். கல்யாணை தான் தீவிரமாக காதலித்து வருவதாகவும், அவரை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறும் கேட்டுள்ளார். இதனால், குழப்பத்தில் இருந்த விமலா, நன்றாக யோசித்துவிட்டு, அந்த பெண்ணின் ஆசைக்கு ஒத்துக்கொண்டுள்ளார்.
பின்னர், தனது கணவரை அவரது முன்னாள் காதலிக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இந்த சம்பவம், இணையத்தில் பெரும் வைரலாக பரவி வந்தது. இப்படி ஒரு மனைவி கிடைக்க வேண்டும் என்றும் பலர் கூறி வந்தனர்.
இந்நிலையில், தனது இரண்டு மனைவிகளின் தொல்லை தாங்க முடியவில்லை என்று கூறிவிட்டு, கல்யாண் தலைமறைவாகியுள்ளார். ஒண்ணுக்கு ரெண்டாக கிடைத்துவிட்டதே என்று சந்தோஷத்தில் இருந்த அந்த நபர், இப்படி ஆகும் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்.