வியக்க வைத்த திலக் வர்மா: வேண்டுகோள் வைத்த அஷ்வின்!

இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இளம் வீரர் திலக் வர்மா சர்வதேச கிரிக்கெட் கேரியரை அபாரமாக தொடங்கியுள்ளார். 39, 51, 49* (நாட்-அவுட்) என தனது முதல் மூன்று சர்வதேச போட்டிகளில் அவர் ரன் குவித்துள்ளார். இதன் மூலம் தனது வருகையை உலக கிரிக்கெட்டுக்கு உரக்க சொல்லியுள்ளார்.

“திலக் வர்மா மீது நம்பிக்கை வைத்து இந்திய அணி தேர்வாளர்கள், அவரை உலக கோப் அணியில் சேர்க்க வேண்டும் ” என அஷ்வின் தெரிவித்தார்.

இதுகுறித்து இந்திய அணி சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் கூறியது: இந்திய ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சன் சிறப்பாக செயல்படுகிறார். ஆனால் இளப் வீரர் திலக் வர்மா, இடதுகை பேட்டர். தற்போதுள்ள அணியில் ‘டாப்-7 வரிசையில் ஜடேஜா மட்டும் தான் இடதுகை பேட்டராக உள்ளார். இதனால் இந்திய அணி தேர்வாளர்கள் நிர்வாகிகள் திலக் வர்மா மீது நம்பிக்கை வைத்து உலக கோப்பை அணியில் சேர்க்க வேண்டும்.

ஏனெனில் ஆஸ்திரேலியாவில் ஏகார், இங்கிலாந்தில் மொயின் அலி, அடில் ரஷித், என பெரும்பாலான அணிகளில் இடதுகை பேட்டர்களுக்கு சவால் கொடுக்கும் ‘பிங்கர்’ ஸ்பின்னர்கள் இல்லை. இதனால் திலக் வர்மா இந்திய அணிக்கு முக்கியமாக தேவைப்படுவார்.

இப்போது தான் அவர் சர்வதேச கிரிக்கெட்டுக்கு வந்துள்ளார் என்றாலும், முதல் மூன்று போட்டியில் எல்லோரையும் கவனிக்க வைத்துள்ளார். அவரது பேட்டிங்கை பார்த்த எந்த தேர்வாளரும் உலக அணியில் சேர்ப்பது குறித்து பரிசீலனை செய்வார். இவ்வாறு அவர் கூறினார்.

RELATED ARTICLES

Recent News