மிஷ்கின் இயக்கத்தில், விஷால் நடிப்பில் உருவாகியிருந்த திரைப்படம் துப்பறிவாளன். ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த இப்படம், மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகத்தை, இதே கூட்டணி இயக்க இருப்பதாக, சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது.
ஆனால், சில பிரச்சனைகளின் காரணமாக, மிஷ்கின் அப்படத்தில் இருந்து வெளியேறினார். மேலும், அப்படத்திற்கு தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும் என்று, மிஷ்கினிடம் விஷால் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இறுதியில், பெரும் தகராறுக்கு பிறகு, அந்த சான்றிதழ் கிடைத்து, துப்பறிவாளன் 2-ஆம் பாகத்திற்கான பணியில், விஷால் ஈடுபட்டு வந்தார்.
ஆனால், தற்போது வந்துள்ள தகவலின்படி, நிதி பிரச்சனையின் காரணமாக, இப்படத்தை படக்குழுவினர் டிராப் செய்துவிட்டதாக தகவல் கசிந்துள்ளது.
இதனை பார்த்த நெட்டிசன்கள், இந்த கதை, மிஷ்கினிடம் இருந்திருந்தால், அவராவது படமாக எடுத்திருப்பார் என்றும், இதற்கு பருத்தி மூட்டை குடோன்லியே இருந்திருக்கலாம் என்றும், கிண்டலாக கமெண்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.