அஜித் குமார் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் துணிவு. வரும் பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ள இந்த திரைப்படம், பெரும் வசூல் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அஜித்தின் துணிவு, தனது முதல் சாதனையை தற்போது பதிவு செய்துள்ளது. அதாவது, புக் மை ஷோ என்ற இணைய பக்கத்தில், துணிவு படத்தை பார்க்க எத்தனை பேர் ஆர்வமாக உள்ளனர் என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு, 3 லட்சம் பேர் ஆர்வம் உள்ளது என்று தெரிவித்துள்ளனர். பட வெளியீட்டிற்கு இன்னும் 2 மாதங்கள் இருப்பதால், ஆர்வம் தெரிவிப்போரின் எண்ணிக்கை பலமடங்காக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.