திமுக கூட்டத்தில் பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம்!

திமுக கூட்டத்தில் பிரியாணி சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்டோர்க்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் வில்லூரில் திமுக தெற்கு ஒன்றிய பொது உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் மதன்குமார் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 2000 பேருக்கு மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் நலத்திட்ட உதவிகள் வழங்கியுள்ளார். அப்போது சிக்கன் பிரியாணி தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது.

இதனை வாங்கி சென்ற பெண்கள் பள்ளி முடிந்து வந்த தங்களது குழந்தைகளுடன் பிரியாணியை சாப்பிட்டதாக தெரிகிறது.

சாப்பிட்ட சிறிது நேரத்தில் சிறுவர்கள் உள்ளிட்ட பலரும் வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்று போக்கால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 150-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கள்ளிக்குடி, லாலாபுரம், சத்திரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 10 சிறுவர், சிறுமியர் உள்ளிட்ட 25 பேர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர் நடத்திய விசாரணையில் முதல்நாள் இரவே பிரியாணியை தயாரித்து டப்பாவில் அடைத்து வைக்கப்பட்டதால் பிரியாணி கெட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News