“இது மக்களின் வெற்றி” – ஸ்மிருதி இராணியை தோற்கடித்த கே.எல்.சர்மா பேட்டி!

உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில், பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இராணியை எதிர்த்து, காங்கிரஸ் வேட்பாளர் கே.எல்.சர்மா போட்டியிட்டார். இந்த தேர்தலில், ஸ்மிருதி இராணியை வீழ்த்திய இவர், 1 லட்சத்து 67 ஆயிரத்து 196 வாக்குகள் பெற்று, அபார வெற்றி பெற்றார்.

இந்நிலையில், இன்று ஏ.என்.ஐ செய்தி ஊடகத்திற்கு அவர் பேட்டியளித்தார். அந்த பேட்டியில், “நான் இந்த தொகுதியில் வெற்றி பெற்று இருக்கிறேன். இது மக்களின் வெற்றி” என்று கூறினார்.

தோல்விக்கு பிறகு, “இன்னும் சந்தோஷமாக தான் இருக்கிறேன்” என்று ஸ்மிருதி இராணி கூறியிருந்தார். இவரது இந்த கருத்துக்கு பதில் அளித்த கே.எல்.சர்மா, “நாங்கள் ஒரே தொகுதியில் போட்டியிடுவதாக இருந்தால், வெற்றியும் தோல்வியும் எப்போதும் வந்துபோகும்.

ஒருவர் வெற்றி பெறும் வேளையில், இன்னொரு தோற்க வேண்டும். தோல்விக்கு பிறகும், தனது உற்சாகம் உச்சத்திலேயே இருக்கிறது என்று யாராவது சொன்னால், அது ஒரு நல்ல விஷயம்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “வேலைவாய்ப்பின்மை, விவசாயிகளின் வருமானம், பணவீக்கம் போன்ற பல்வேறு பிரச்சனைகளின் அடிப்படையில், மக்கள் வாக்களித்துள்ளார்கள்.

அவர்கள், என்னை அவர்களது எம்.பியாக தேர்ந்தெடுத்துள்ளார்கள். எனவே, அவர்களின் நலனுக்காக நான் பணியாற்றுவேன்” என்று கூறினார்.

“ராகுல் காந்தியின் வெற்றி சான்றிதழை ஒப்படைக்கவே நான் இங்கு வந்திருந்தேன். சோனியா காந்தி ஜியிடம், நான் ஆசீர்வாதத்தையும் பெற்றேன்” என்று அவர் கூறினார்.

“நான் எம்.பியாக ஆகியிருப்பதால், நான் ஏற்கனவே இருப்பதை போலவே, மிகவும் பணிவுடன் இருக்க வேண்டும் என்று, கட்சியின் மூத்த தலைவர்கள் என்னிடம் கேட்டுக் கொண்டார்கள்.

அனைவரிடமும், மரியாதையாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் எனக்கு வழிகாட்டினார்கள். எம்.பியாக மாறியிருப்பதால், அதுபற்றி நான் எப்போதும் ஈகோவுடன் நிச்சயம் இருக்க மாட்டேன்” என்று கூறினார்.

“நான் அனைவருக்கமான எம்.பி., நான் அனைவருக்காகவும் பணியாற்றுவேன். ஒருவர் வெற்றி பெறும்போது, பொறுப்புகள் அனைத்தும் ஒருவரின் தோள்கள் மீதே விழும். ஆனால், அந்த பொறுப்புகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன். நான் மக்களுடன் இணைந்து பணியாற்றும்போது, நான் வெற்றிகரமாக இருப்பேன்” என்று கூறினார்.

“அமேதி மக்களுக்கு என்ன வேண்டும் என்பதை நான் கவனிப்பேன்” என்றும், “தொகுதி மக்களின் ஈடுபாடு இல்லாமல், நான் எந்தவொரு திட்டத்தையும் கொண்டு வர மாட்டேன்” என்றும், அவர் பேசி முடித்தார்.

RELATED ARTICLES

Recent News