நடிகர் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம், வரும் பொங்கல் பண்டிகை அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் பங்கேற்ற தனுஷ் இப்படத்தின் கதை இது தான் என்று கூறி ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளார். அதாவது, ‘ஒரு மனிதனுக்கு தேவை சுதந்திரம் மற்றும் மரியாதை. அது கிடைக்காவிட்டால் அதற்கான போராட்டம் நடக்கும். இந்த போராட்டமே கேப்டன் மில்லர் என்று தனுஷ் கூறியுள்ளார்.
கேப்டன் மில்லர் இசைவெளியீட்டு விழாவில் தனுஷ் பேசிய பல விஷயங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.