வடமாநில இளைஞர்கள் டார்கெட்.. திருப்பத்தூர் கும்பலின் பலே பிளான்..

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் முகமது அப்துல் அன்சாரி. இவரிடம் அறிமுகமான இளைஞர் ஒருவர், வேலை வாங்கித் தருவதாக கூறி உறுதி அளித்துள்ளார். மேலும், தனது நண்பர்களை அழைத்து வந்தாலும், வேலை வாங்கித் தருகிறேன் என்று கூறியுள்ளார்.

இவரது பேச்சை நம்பி, அன்சாரியும், அவரது நண்பர்களும், இளைஞர் கூறிய இடத்திற்கு சென்றுள்ளனர். ஆனால், அங்கிருந்த மர்ம நபர்கள் சிலர், வடமாநில இளைஞர்களை தாக்கிவிட்டு, அவர்களிடம் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இவ்வாறு தப்பிச் செல்லும்போது, கொள்ளை கும்பலை சேர்ந்த அரவிந்தன் என்ற இளைஞரை மட்டும், வடமாநில இளைஞர்கள் மடக்கிப் பிடித்துள்ளனர். இதையடுத்து, அவரை காவல்துறையில் ஒப்படைத்த வடமாநில இளைஞர்கள், புகார் அளித்துள்ளனர்.

புகாரை ஏற்றுக் கொண்ட காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில், கொள்ளை கும்பல், கேரளாவில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

பின்னர், அங்கு சென்ற காவல்துறையினர், 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வேலை தேடி தமிழகத்திற்கு வரும் வடமாநில இளைஞர்களை குறிவைத்து, வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட இளைஞர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், அவர்களை சிறையில் அடைத்தனர்.

RELATED ARTICLES

Recent News