சென்னை பம்மல் அடுத்த மூங்கிலேரியில் கடந்த 18 ம் தேதி இரவு ஐ.டி கம்பெனியில் பணி செய்யும் திருநங்கை தனா (25) அப்பகுதியில் உள்ள உணவகத்தில் உணவு சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பியுள்ளார்.
அப்போது அப்பகுதி இளைஞர்கள் சிலர் குழந்தைகளை கடத்த வந்ததாக நினைத்து மின் கம்பத்தில் கட்டிவைத்து அரை நிர்வாண கோலத்தில் சரமாரியாக தாக்கினர்.
மேலும், இந்த வீடியோ சமூக வளைதளங்களில் பரவியது தொடர்ந்து வழக்கு பதிவு செய்த சங்கர் நகர் போலீசார் குமார்(26), முருகன்(46) ஆகிய இருவர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.