பரமக்குடியில் பட்டப்பகலில் டூவீலரில் டிக்கியில் இருந்து பணப்பையை இளைஞர் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த பெண் ஒருவர் வங்கியில் எடுத்த பணத்தை தனது டூவீலரின் டிக்கியில் வைத்து விட்டு பரமக்குடி பஜார் பகுதி சுவாமி சன்னதி தெருவில் தனது டூவீலரை நிறுத்திவிட்டு கடைக்கு பொருட்கள் வாங்க சென்றுள்ளார்.
அப்போது டூவீலர் அருகில் வந்து நின்று கொண்டிருந்த ஒரு இளைஞர் டூவீலரின் டிக்கியிலிருந்த பணப்பையை திருடிக் கொண்டு செல்கிறார்.
அந்த பணப்பையில் ரூபாய் 80 ஆயிரம் இருந்துள்ளது. பட்டப்பகலில் டூவீலரின் டிக்கியில் இருந்த பணப்பையை இளைஞர் திருடி செல்லும் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.