ஏற்காட்டில் அசம்பூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பழனிவேல் என்பவரின் மனைவி பார்வதி (56), நேற்று நாட்டுத் துப்பாக்கி ஒன்றை எடுத்துக் கொண்டு சேலம் ஆட்சியர் அலுவலக வளாகத்துக்குள் வந்தனர். இதை பார்த்த போலீஸார், அவர்களிடம் விசாரித்தனர்.
விசாரணையில் தனது கணவர் பழனிவேல், காவல்துறையில் உரிமம் பெற்று, கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, நாட்டுத் துப்பாக்கியை பயன்படுத்தி வந்துள்ளார். உடல் நலக்குறைவால் அவர் இறந்து போனதால் துப்பாக்கியின் உரிமம் புதுப்பிக்கப்படாமல் இருந்தது. இதனால் எனவே, அந்த துப்பாக்கியை ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க வந்தாக கூறினார்.
இதையடுத்து, சேலம் கோட்டாட்சியர் அலுவலகத்துக்குச் சென்று, துப்பாக்கியை ஒப்படைக்க விண்ணப்பிக்கும்படி போலீஸார் அனுப்பி வைத்தனர். ஆட்சியர் அலுவகத்தில் துப்பாக்கியுடன் பெண் வந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.