வேறொரு ஆணுடன் பைக்கில் சென்ற மனைவி…காரை விட்டு ஏத்திய கணவர்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சாலைப்புதூர் பகுதியைச் சேர்ந்த பிரதீப்குமார்(29) என்பவருக்கும், வீரலப்பட்டி கிராமம் வண்ணாம்பாறையைச் சேர்ந்த நந்தினி(25) என்பவருக்கும் கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் நந்தினி தனது அலுவலகத்தில் பணிபுரியும் அசோக்குமார்(29) என்பவரை தன்னுடை இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு சென்றுள்ளார். இதனை பார்த்த நந்தினியின் கணவர் பிரதீப்குமார் காரில் வேகமாக சென்று பைக் மீது மோதியுள்ளார். இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த நந்தினியை காரில் தூக்கி போட்டுக்கொண்டு அசோக்குமாரை சம்பவ இடத்திலேயே விட்டுவிட்டு சென்றுள்ளார். இதை கவனித்த தும்பிச்சம்பட்டி பகுதி பொது மக்கள் பிரதீப்குமாரை பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்.

காயமடைந்த நந்தினி மற்றும் அசோக்குமாரை ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவியை காரை ஏற்றி கொலை முயற்சியில் ஈடுபட்ட பிரதீப்குமார் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரிடம் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News