நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஏப்ரல் – ஜூன் மாதங்களில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது குருத்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது: நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஏப்ரல் – ஜூன் மாதங்களில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. வெப்ப அலைகளால் மத்திய மற்றும் மேற்கு தீபகற்ப பகுதிகள் மோசமாக பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, ஏப்ரல் மாதத்தில் குஜராத், மத்திய மகாராஷ்டிரா, வடக்கு கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஒடிசா, வடக்கு சத்தீஸ்கர் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வெப்ப அலைகளின் மோசமான தாக்கத்தை சந்திக்க நேரிடும் என கூறியுள்ளது.