அரசு பள்ளி மாணவிகளை கிண்டல் செய்த வாலிபருக்கு தர்மஅடி!

சென்னை அருகே அரசு பள்ளி மாணவிகளை கிண்டல் செய்த வாலிபருக்கு தர்மஅடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

சென்னையை அடுத்த பெரும்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது மாணவி ஒருவர் தனியாக வந்த நிலையில் இளைஞர் ஒருவர் மாணவியை கிண்டல் செய்துள்ளார்.

இதை பார்த்துக் கொண்டிருந்த மாணவியின் பின்னால் வந்து கொண்டிருந்த உறவினர் அந்த இளைஞர் பிடித்து கேட்டபோது திமிராக பதிலளித்ததால் ஆத்திரமடைந்த மாணவியின் உறவினர் இளைஞரை பிடித்துக் கொண்டு அருகில் உள்ள பெரும்பாக்கம் காவல் நிலையத்திற்கும் பெண்ணின் பெற்றோர்க்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

அந்த வழியாக வந்த மனாவிகள் சிலர் இந்த இளைஞர் தினமும் மாணவிகளை காதலிப்பதாகவும், கேலி கிண்டல் செய்து வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளதை கூறியுள்ளனர்.

இதை கேட்ட மாணவிகளை அழைத்து செல்ல வந்த பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் அந்த இளைஞருக்கு தர்மஅடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த இளைஞரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News