உச்சத்தை தொட்ட பூண்டின் விலை!

கோயம்பேடு சந்தைக்கு பூண்டு வரத்து குறைவால் அதன் விலை மீண்டும் உயர்ந்து கிலோ ரூபாய் 300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை கோயம்பேடு சந்தைக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் பலவகையான காய்கறிகள் வருகிறது.

அந்த வகையில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து பூண்டு விற்பனைக்கு வருகிறது, கடந்த பத்து நாட்களாக பூண்டு வரத்து குறைந்ததால் பூண்டு விலை 1 கிலோவுக்கு ரூபாய் 100 வரை அதிகரித்து உள்ளது.

மொத்த விற்பனையில் ரகத்தை பொறுத்து ஒரு கிலோ பூண்டு 250 முதல் 300 வரையும் சில்லறை விற்பனையில் ரூபாய் 300 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.

இதைப்போல் பீன்ஸ் வரத்து குறைவால் கோயம்பேடு சந்தையில் பீன்ஸ் விலை தொடர்ந்து ஏறி வருகிறது. மொத்த விற்பனையில் பீன்ஸ் கிலோ 160 க்கும், சில்லறையில் 180 ரூபாய் வரையும் விற்கப்படுகிறது.

அதேபோல் கேரட் மொத்த விற்பனையில் 60 ரூபாய்க்கும் சில்லறை விற்பனையில் 65 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல வெண்டைக்காய்,பாவக்காய், கத்திரிக்காய், புடலங்காய் சௌசௌ உள்ளிட்ட பச்சை காய்கறிகளின் விலைகள் கிலோவிற்கு 10 ரூபாய் உயர்ந்துள்ளது.

RELATED ARTICLES

Recent News