வணிகர் சங்கத்தின் தலைவர் வெள்ளையன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வணிகர் சங்கத்தின் தலைவர் வெள்ளையன் கடந்த மூன்றாம் தேதி உடல்நலக்குறைவால் சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த ஒரு வாரமாக நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்து இன்று (செப்.10) உயிரிழந்தார்.
இச்சம்பவம் வணிகர்கள் மற்றும் பொதுமக்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.