அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள குந்தபுரம் காலனி தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் இவரது மனைவி லெட்சுமி. இவர்கள் பசு மாடுகளை வளர்த்து தங்களது வாழ்வாதாரத்தை வளர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் வீட்டிற்கு அருகே பசுமாடு கட்டியிருந்த இடத்திற்கு மேலே சென்றிருந்த மின்கம்பி எதிர்பாராத விதமாக அருந்து விழுந்தது. அப்பொழுது அருகில் கட்டி இருந்த பசு மாட்டின் மீது மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பசுமாடு உயிரிழந்தது.
இதையறிந்த மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மின்சாரத்தை துண்டித்து மின் கம்பியை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இது குறித்த புகாரின் பேரில் திருமானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தங்களின் வாழ்வாதாரமாக உள்ள பசுமாடு மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் தங்களுக்கு உரிய இழப்பீடு தமிழ்நாடு அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முருகேசனின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.