அமைச்சரின் தலையில் மஞ்சள் பொடியை தூவிய நபர்

மகாராஷ்டிரா மாநிலத்தில் வருவாய்த்துறை அமைச்சராக இருப்பவர் ராதாகிருஷ்ணா விகே பாட்டீல். இவர் இன்று சோலாபூரில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் பொதுமக்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ‘தங்கர்’ என்ற சமுதாயத்தைச் சேர்ந்த 2 பேர் கோரிக்கை மனு அளித்தனர்.

அப்போது ஒரு நபர் திடீரென அமைச்சர் மீது மஞ்சள் பொடியை தூவி உள்ளார். இதையடுத்து உடனடியாக மந்திரியின் ஆதரவாளர்கள் அந்த நபரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மஞ்சள் பொடியைத் தூவிய நபரின் பெயர் சேகர் பங்கலே என்பது தெரிய வந்துள்ளது. தங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் நீண்ட காலமாக இட ஒதுக்கீடு தொடர்பான கோரிக்கையை முன்வைத்து வருவதாகவும், இது தொடர்பாக அரசின் கவனத்தைப் பெறவே மந்திரியின் மீது மஞ்சள் பொடியை தூவியதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அமைச்சர் ராதாகிருஷ்ணா கூறுகையில், மஞ்சள் என்பது புனிதமான பொருளாக கருதப்படுவதால், இது குறித்து எந்த வருத்தமும் இல்லை. மேலும் அந்த நபர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என அதிகாரிகளிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News