மகனுக்கு சாதி சான்றிதழ் கிடைக்காத விரக்தியில், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்த காஞ்சிபுரத்தை சேர்ந்த நபர் சிகி ச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியை சேர்ந்த வேல்முருகன், தனது மகனுக்கு சாதி சான்றிதழ் பெற முயற்சித்து வந்ததாத கூறப்படுகிறது. இருப்பினும், சான்றிதழ் கிடைக்காததால், உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள இலவச சட்ட உதவி மையத்திற்கு நேற்று வந்துள்ளார்.
அப்போது, திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை ஊற்றி, வேல்முருகன் தீக்குளித்தார். 50 சதவீத தீக்காயங்களுடன், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகி ச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.