மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி சட்டநாதபுரத்தைச் சேர்ந்தவர் அரவிந்தன். இவர் ஓவிய ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார். ஓவியக்கலையில் மிகுந்த ஆர்வம் உள்ள இவர் பல்வேறு சாதனை முயற்சிகளை செய்திருக்கிறார்.
இந்நிலையில் மறைந்த கேப்டனுக்கு அஞ்சலி செலுத்த விரும்பிய அரவிந்தன் தனது ரத்தத்தின் மூலம் கேப்டன் ஓவியத்தை வரைய முடிவு செய்துள்ளார். அதைத்தொடர்ந்து தனது உடலில் இருந்து 3 மில்லி அளவு ரத்தத்தை சிரிஞ்சு மூலம் எடுத்து அதைக்கொண்டு விஜயகாந்தின் உருவப்படத்தை வரைந்துள்ளார்.
மொத்தம் மூன்று மணி நேரத்தில் விஜயகாந்த் உருவத்தை அவர் வரைந்து முடித்திருக்கிறார். பலரும் பல விதமாக கேப்டனுக்கு அஞ்சலி செலுத்திய நிலையில் ஓவியர் ஒருவர் தனது ரத்தத்தின் மூலம் அஞ்சலி செலுத்தியது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.