சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான அருள் சரவணன், தனது கடையின் விளம்பரப் படங்களில் நடித்து பெரும் பிரபலம் அடைந்தார். இதையடுத்து, சினிமாவில் களமிறங்கிய இவர், தி லெஜண்ட் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.
அவரே தயாரித்திருந்த இந்த படத்தில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலரும் நடித்திருந்தனர். இருப்பினும், பல்வேறு விதமான ட்ரோல்களுக்கு உள்ளான இந்த திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது.
இந்நிலையில், அருள் சரவணன் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, திரையரங்கில் வரும்போதே பல்வேறு ட்ரோல்களுக்கு உள்ளான இந்த திரைப்படம், ஓடிடியில் வெளியானால், நிச்சயம் பலத்த அடி வாங்கும். இதனை அறிந்துக் கொண்டு, அந்த படத்தை ஓடிடியில் விற்கப்போவதில்லை என்ற முடிவை அவர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.