வரதட்சணை கேட்டு மூக்கை கடித்து துப்பிய கணவன்..!

உத்தரப்பிரதேச மாநில மகேஷ்பூர் பகுதியைச் சேர்ந்த தம்பதி நஜீம்,அஜ்மி. கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமணமான இவர்களுக்கு 5 மாதத்தில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

திருமணத்தின் போது தருவதாக சொன்ன வரதட்சணையை அஜ்மி வீட்டார் தராததால் அஜ்மியை அவ்வப்போது துன்புறுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மது போதையில் வந்த நஜீம், வரதட்சணை கேட்டு அஜீமை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும் வரதட்சணை கொடுக்க முடியாத உனக்கு மூக்கு எதற்கு, என கூறி, அஜ்மியின் மூக்கின் நுனியை கடித்து துப்பியுள்ளார்.

வலி தாங்க முடியாமல் அலறிய அஜ்மி, அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், கணவர் நஜீம் மற்றும் அவரது தந்தை சபீர், குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர்.

RELATED ARTICLES

Recent News