பயணியை தகாத வார்த்தையால் திட்டி கன்னத்தில் அறைந்த அரசு பேருந்து நடத்துநர்!

நெல்லை நோக்கி வந்த அரசு பேருந்தில் ஏற வந்த பயணியை நடத்துனர் தகாத வார்த்தையால் பேசி தாக்கிய காட்சி சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

நெல்லை மாவட்டம் மூலைக்கரை பட்டியயில் இருந்து திருநெல்வேலி டவுன் நோக்கி அரசு பேருந்து இன்று காலை கிளம்பிய போது மூட்டை முடிச்சுகளுடன் ஏற வந்த பயணி ஒருவரை நடத்துனர் தகாத வார்த்தையால் பேசி அவரது கன்னத்தில் அறைந்து அவரை பேருந்தில் ஏற விடாமல் தடுத்துள்ளது.

அந்தப் பயணி அதனை கண்டித்து திரும்ப நடத்துனரிடம் பேச முயற்சி செய்யும்போது அவரை மறுபடியும் தகாத வார்த்தையால் திட்டி கை ஓங்கி அடித்துள்ள காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதற்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுத்து வருகிறது.

RELATED ARTICLES

Recent News