வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘தி கோட்‘ திரைப்படம் அடுத்த வாரம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம்ஜி, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Also Read : தி கோட் படம் எப்படி இருக்கு? ரசிகர்கள் ஆச்சரியம்!
சமீபத்தில், இப்படத்தின் டிரைலர், பாடல்கள் என வெளிவந்து மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தி கோட் படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் ரூ. 10.9 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.